விவசாயம்

“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”- ப.சிதம்பரம் தாக்கு

“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”- ப.சிதம்பரம் தாக்கு

Veeramani

விளைபொருள்களுக்கு ‘குறைந்தபட்ச விலை உத்தரவாதம்’ என்ற முறையை ஒழிக்க பாஜக அரசு முயலுகிறது. எனவேதான் பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநிலங்களின் விவசாயிகள் தெருக்களுக்கு வந்து போராடுகிறார்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிய இரண்டு விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது. விவசாயியின் தேவை ஆயிரமாயிரம் சந்தைகள். ஊரகப் பகுதிகளில் சிறிய நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் சந்தைகளை அமைப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். அதனைச் செய்யாமல், இருக்கும் ஒரே ஒழுங்குமுறை சந்தையையும் ஒழிக்கும் முயற்சியை பாஜக அரசு செய்கிறது.

 விளைபொருள்களுக்கு ‘குறைந்த பட்ச விலை உத்தரவாதம்’ என்ற முறையையும் பாஜக அரசு ஒழிக்க முயலுகிறது. எனவேதான் பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநிலங்களின் விவசாயிகள் தெருக்களுக்கு வந்து போராடுகிறார்கள். அஇஅதிமுக அரசோ மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது!

 தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ1150. ஆனால் பல விவசாயிகள் ரூ850க்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். இது ஏன் என்று தமிழ்நாடு அரசு விளக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்