விவசாயம்

'சம்மர் டைம்' எலுமிச்சை தேவை அதிகரிப்பு - விலை கிடுகிடு உயர்வு!

'சம்மர் டைம்' எலுமிச்சை தேவை அதிகரிப்பு - விலை கிடுகிடு உயர்வு!

JustinDurai

தேவை அதிகரிப்பால், நாடு முழுவதும் எலுமிச்சையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடைக்காலம் மக்களை வாட்டி வரும் நிலையில், பலரும் எலுமிச்சை பழரசத்தை அருந்துகின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளது. ஜெய்ப்பூர் மாநிலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் எலுமிச்சையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

பருவம் தவறிய மழை காரணமாக, எலுமிச்சையின் வரத்து இந்த ஆண்டு குறைந்ததும், விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விலையில் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய் வரை விற்பனையாகிறது. தமிழகத்திலும் எலுமிச்சை விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: கச்சா எண்ணெய் விலை குறைந்தது - எத்தனை டாலர்கள்?