விவசாயம்

வேளாண் பட்ஜெட் 2021-22: ரூ.2.18 கோடி செலவில் மூலிகை செடிகளை பெருக்க நடவடிக்கை

நிவேதா ஜெகராஜா

மூலிகை செடிகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், வைட்டமின் சி பெட்டகம் என அழைக்கப்படும் நெல்லி 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மூலிகை செடிகள், நெல்லி காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவரப் பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்திற்கு வழங்கப்படும்; மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும் ஆகிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.