விவசாயம்

ம.பி: ஒரு கிலோ மாம்பழம் ரூ2.7 லட்சம்.. தோட்டத்தை ’தீயாய்’ பாதுகாக்கும் உரிமையாளர்கள்

EllusamyKarthik

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் பகுதியில் அமைந்துள்ள மாம்பழ தோட்டத்தில் விளைந்துள்ள மாம்பழங்களை பாதுகாக்க நான்கு காவலர்கள் மற்றும் ஆறு நாய்களை காவலுக்கு வைத்துள்ள தோட்டத்துக்கு உரிமையாளர்களான தம்பதியர். 

“கடந்த ஆண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடி சென்றனர். இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்கும். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்ககவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளோம்” என்கின்றனர் தம்பதியர். 

இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனை ஆகி உள்ளது.