விவசாயம்

மழையில் நனைந்து 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

kaleelrahman

கள்ளக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக 3 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த மாதம் நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம் 22 ஆயிரத்து 800 ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் குணசேகரன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அந்நாளில் இருந்து இதுவரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல்லை கொண்டு வந்து காத்துக் கிடக்கின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து சேதமாகி உள்ளன.

எனவே உடனடியாக விரைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.