விவசாயம்

விருத்தாசலம்: கிடங்கில் தேங்கிய 20,000 நெல்மூட்டைகள்; சோகத்தில் விவசாயிகள்!

விருத்தாசலம்: கிடங்கில் தேங்கிய 20,000 நெல்மூட்டைகள்; சோகத்தில் விவசாயிகள்!

Sinekadhara

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த 3 நாட்களாக பனியிலும், வெயிலிலும் தேங்கிக் கிடப்பதால் உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனைக்கூடத்திற்கு விடுமுறை என்பதால் நெல் கொள்முதல் நடைபெறாமல் இருந்துள்ளது. ஆனால் அதிகப்படியான நெல்மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால் கிடங்கில் இடமில்லாமல் வெளியே வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.