விவசாயம்

“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, குண்டர்கள்”: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை, குண்டர்கள்”: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

Veeramani

“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள்என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, “அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள், அவர்கள் செய்பவை குற்றச் செயல்கள். ஜனவரி 26 அன்று நடந்தது வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். எதிர்க்கட்சி இதுபோன்ற விவசாயிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது” என தெரிவித்த அவர்  'உழவர் நாடாளுமன்றத்தில்' ஒரு ஊடக நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.