#TopNews ட்ரம்பின் திட்டம் முதல் ஸ்டாலினின் வலியுறுத்தல் வரை..!

#TopNews ட்ரம்பின் திட்டம் முதல் ஸ்டாலினின் வலியுறுத்தல் வரை..!

#TopNews ட்ரம்பின் திட்டம் முதல் ஸ்டாலினின் வலியுறுத்தல் வரை..!
Published on

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மிகக் குறைந்த அளவாக நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

3 லட்சம் கொரோனா விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகிக்கபட மாட்டாது. தலைமைச் செயலாளருடன் நடந்த ஆலோசனையில் இஸ்லாமிய அமைப்புகள் முடிவு.


தமிழ்நாட்டில், வரும் ஜூன் மாதத்தில்தான் கல்லூரிகள் திறக்கப்படும். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதிய தலைமுறைக்குத் தகவல்.

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர இயலாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். உள்நாட்டில் உள்ள இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் விளக்கம்.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தைத் தாண்டியது. சுமார் ஐந்தரை லட்சம் பேர் குணமடைந்து விட்டதால், பாதிக்கப்பட்ட நாடுகளில் பெருகும் நம்பிக்கை.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதவி விலகும் வரை நிதியுதவி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். அமெரிக்க வெளியுறவு விவகார கமிட்டி உறுப்பினர்கள், அதிபர் ட்ரம்புக்கு கடிதம் மூலம் வலியுறுத்தல்.

அமெரிக்க பொருளாதாரத்தை பழைய நிலைக்குக் கொண்டுவர 3 அம்ச திட்டத்தை அறிவித்தார் ட்ரம்ப். நியூயார்க்கில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவு மே 15ஆம் தேதி வரை நீட்டிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com