மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன் விரோதம் காரணமாக அரசுப்பள்ளி மாணவனை கத்தியால் குத்தியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அர்ஜூன் என்ற மாணவன், தனது உறவினர் ஜெயலட்சுமி என்பவர் வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் அர்ஜூனுக்கு முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ஜூனை, கார்த்திக் ராஜா கத்தியால் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார். இதனையடுத்து அர்ஜூன் மேல் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

