`பார்ட் டைம் கீப்பர் எதற்காக?’- ராகுல் கேட்ச் விட்டதற்கு கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்

`பார்ட் டைம் கீப்பர் எதற்காக?’- ராகுல் கேட்ச் விட்டதற்கு கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்
`பார்ட் டைம் கீப்பர் எதற்காக?’- ராகுல் கேட்ச் விட்டதற்கு கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்

வங்கதேச அணிக்கான ஒருநாள் போட்டியில் முக்கியமான கடைசி விக்கெட்டிற்கான கேட்சை, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தவறவிட்டதால் இன்று படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி.

இன்று நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில், வங்கதேச அணியை 136 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் கடைசி 1 விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறிய இந்திய அணி தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் மற்றும் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகள் என கைப்பற்றி அசத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் இந்திய அணியில் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 73 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 136 ரன்களில் வங்கதேசத்தின் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி பதிலடி கொடுத்து அசத்தினர். பின்னர் எளிதாக இந்திய அணி வென்றுவிடும் என்ற இடத்தில் கைக்கோர்த்த மெஹிதி ஹசன் மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருவரும் கடைசிவிக்கெட்டை விட்டுகொடுக்காமல் இறுதி வரை நின்று விளையாடினர். தொடர்ந்து நோ-பால், மிஸ் பீல்ட், கேட்ச் என கிடைத்த வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட, அதை பயன்படுத்திக்கொண்ட மெஹிதி ஹசன் சிக்சர் பவுண்டரிகள் என விளாச, முடிவில் 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது வங்கதேச அணி.

முக்கியமான நேரத்தில் கேட்சை கோட்டவிட்ட கேஎல் ராகுல்!

43ஆவது ஓவரில் 4ஆவது பந்தை ஷர்துல் தாஹூர் வீச, அதை மெஹிடி ஹசன் காற்றில் அடிக்க அந்த பந்து விக்கெட் கீப்பருக்கு மேலாக காற்றில் பறக்கும். சரியாக பந்துக்கு அடியில் சென்ற விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல், கேட்சை சரியாக பிடிக்காமல் தவறவிடுவார். அனைத்தையும் சரியாக செய்த ராகுல் கேட்சை கோட்டைவிட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்சை தவறவிட்ட ராகுல், இந்திய அணியின் வெற்றியை தவறவிட முக்கியமான காரணமாக அமைந்தார்.

விக்கெட் கீப்பரே கேட்சை தவறவிட்டது பேசுபொருளாக மாறியுள்ளது!

கேட்சை மட்டுமில்லாமல் பல பந்துகளையும் கைகளிலேயே வாங்காத விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல், கீப்பரின் பின்பக்கம் மட்டும் பல ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் இந்திய அணியில் எதற்காக ஒரு பார்ட்-டைம் விக்கெட் கீப்பர், முழுமையான விக்கெட் கீப்பர் எங்கே? என்ற கேள்வி அதிகமாக எழ ஆரம்பித்துள்ளது.

விக்கெட் கீப்பர்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சே போக்ளே!

விக்கெட் கீப்பர்கள் குறித்து இந்திய அணியின் நிலை என்ன என்று புரியவில்லை என்று பேசியிருக்கும் ஹர்சா போக்ளே, அவருடைய டிவிட்டர் பதிவில் ”ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் இந்தியாவில் இருக்கிறார்! மேலும் அணியில் இஷான் கிஷான்-ம் இருக்கிறார். இப்படி கீப்பர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் போது, விக்கெட் கீப்பிங் செய்ய கே.எல்.ராகுலிடம் ஏன் திரும்ப வேண்டும்? நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் கேஎல் ராகுல் கீப்பிங் செய்வது குறித்து பேசியிருக்கும் அவர், ”உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பிங் செய்ய ராகுலைப் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக பார்ப்பது நீண்ட கால திட்டமாக இருந்தால், அவர் இப்போதிலிருந்தே கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டத்திலும், ஐபிஎல்-ல் கூட விக்கெட் கீப்பராக செயல்பட்டு சிறப்பாக விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com