அதிர்ச்சி கொடுத்த வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ்! பதிலுக்கு விராட் கோலி செய்த தரமான சம்பவம்!

அதிர்ச்சி கொடுத்த வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ்! பதிலுக்கு விராட் கோலி செய்த தரமான சம்பவம்!
அதிர்ச்சி கொடுத்த வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ்! பதிலுக்கு விராட் கோலி செய்த தரமான சம்பவம்!

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி வெற்றிக்காக போராடி வருகிறது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்காவில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் எபடோட் ஹொசைன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

ஒரே ஓவரில் ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி விக்கெட்!

11ஆவது ஓவரை வீசிய வங்கதேச அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகிப் அல் ஹசன், 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பவுல்டாக்கி வெளியேற்றினார். பின்னர் அதே ஓவரில் 4ஆவது பந்தை எதிர்கொண்ட விராட்கோலியையும் அவுட்டாக்கி வெளியேற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், இந்திய அணியை 186 ரன்களில் சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். தொடர்ந்து அபாரமாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

விராட் கோலிக்கு ஷாக் கொடுத்த வங்கதேச கேப்டன்!

ரோகித் சர்மாவின் விக்கெட்டிற்கு பிறகு இறுதிவரை நின்று விளையாட வேண்டிய பொறுப்பு விராட்கோலியின் கையில் இருந்தபோது, ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தை எதிர்கொண்ட விராட் கோலி அதை ஃபார்வர்ட் பிளேயரை தாண்டி அடிக்க முயன்றபோது, வேகமாக சென்ற பந்தை தாவி ஒரு கையில் பிடித்து விராட் கோலியை வெளியேற்றுவார் வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ். அந்த கேட்சை எதிர்பாராத கோலி அதிர்ச்சியான முகத்தை அந்த கேட்சை பார்ப்பார், அப்படி ஒரு சிறப்பான கேட்சில் வெளியேறுவார் விராட் கோலி.

திருப்பி வங்கதேச அணிக்கு ஷாக் கொடுத்த விராட் கோலி!

24ஆவது ஓவரை வாசிங்டன் சுந்தர் வீச, அதை எதிர்கொண்டு விளையாடிய வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், ஃபார்வர்டு பீல்டில் இருந்த விராட் கொலியை தாண்டி தூக்கி அடிக்க முயற்சி செய்து அடிப்பார். வேகமாக வந்த பந்தை தாவி ஒரே கையில் பிடித்து வெளியேற்றுவார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட்டை அபாரமான கேட்சின் மூலமாக வெளியேற்றிய வங்கதேச அணிக்கு, மீண்டும் தனது அபாரமான பீல்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோலி.

இந்நிலையில் இரண்டு சிறந்த கேட்ச்களையும் கொண்டாடி வருகின்றனர் இரண்டு அணி ரசிகர்களும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com