`ஒதுக்கப்பட்ட நிதியில் 40% எங்களுக்கு கொடுங்க'- திமுக எம்எல்ஏ கமிஷன் கேட்ட வீடியோ வைரல்!

ஆம்பூர் அருகே மாதனூரில் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 40% எங்களுக்கு 60% உங்களுக்கு என சட்டமன்ற உறுப்பினர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஆம்பூர் அருகே மாதனூரில் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 40% எங்களுக்கு 60% உங்களுக்கு என சட்டமன்ற உறுப்பினர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஊராட்சி மன்ற பணிகள் தொடர்பாக ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த கூட்டத்தை வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் தனது செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர் 40% கமிஷன் கேட்பதாக வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனிடம் கேட்டபோது, ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், பணிகளை சரியாக பிரித்து செய்ய வேண்டும் என கூறியதாகவும், ஆனால் அதை மாற்றி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே திமுக எம்.எல்.ஏ பேசிய வீடியோவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.


Trending Now

Download PT APP


Follow us on