பென்ஸ் CEO-க்கே இந்த நிலைமையா? - ஆனாலும் பாராட்டிய நெட்டிசன்கள்.. என்ன காரணம்?

பென்ஸ் CEO-க்கே இந்த நிலைமையா? - ஆனாலும் பாராட்டிய நெட்டிசன்கள்.. என்ன காரணம்?
பென்ஸ் CEO-க்கே இந்த நிலைமையா? - ஆனாலும் பாராட்டிய நெட்டிசன்கள்.. என்ன காரணம்?

எந்த பிரச்னையை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் முக்கியமான நேரத்தில் முக்கியமான இடத்திற்கு செல்ல வேண்டி என்னதான் முன்கூட்டியே கிளம்பினாலும் போக்குவரத்து நெரிசலையும், டிராஃபிக் சிக்னலையும் சந்திப்பது என்பது எப்போதும் எவருக்குமே இடியாப்ப சிக்கல்தான். அதுவும் மெட்ரோ நகரங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

வழக்கமாக 15 நிமிடங்களிலேயே கடந்துவிடலாம் என இருக்கும்போது இந்த டிராஃபிக் ஜாமால் 1 மணிநேரமாகிவிடும். நெரிசலுக்கு மத்தியில் சிக்கிவிட்டால் போக்குவரத்து சரியாகும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியே இருக்காது. இல்லையேல் குறித்த நேரத்திற்குள் போக வேண்டிய இடத்தை அடைந்தே தீர வேண்டுமென்றால் கார் இல்லாமல் டிராஃபிக்கை எளிதாக கடக்கக் கூடிய வாகனத்தை பயன்படுத்திதான் ஆக வேண்டும்.

அப்படியான நிலையில்தான் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ மார்ட்டின் ஷ்வெங்க்-க்கு நடந்திருக்கிறது. தன்னுடைய சொகுசு காரான S-கிளாஸ் பென்ஸ் காரை சாலையோரத்தில் விட்டுவிட்டு சில கிலோ மீட்டருக்கே நடந்தே சென்று ஆட்டோ பிடித்து தான் போக வேண்டிய இடத்துக்கு சென்றிருக்கிறார்.

இது தொடர்பான போட்டோவை மார்ட்டினே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “புனேவின் அழகான சாலைகளில் உங்களின் S-class பென்ஸ் கார் டிராஃபிக்கில் சிக்கினால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை காரை விட்டு இறங்கி, கொஞ்சம் கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று ஆட்டோவை பிடிப்பீர்களா?” என மார்ட்டின் தான் செய்ததை கேப்ஷனாக இட்டிருக்கிறார்.

பென்ஸ் சி.இ.ஓ மார்ட்டினின் இந்த பதிவு நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில், ஒருவர் “இதனால்தான் நான் காரே வாங்கவில்லை” என்றும், மற்றொருவர், “டிராஃபிக் சிக்கலை சமாளிக்க பென்ஸ் ரிக்‌ஷா எதிர்காலத்தில் வருமா?” எனவும் பதிவிட்டிருக்கிறார்கள். இதுபோக பலரும் மார்ட்டினின் இந்த செயலுக்கு பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com