மழை வெள்ள பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ. 50,000 இழப்பீடு - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

மழை வெள்ள பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ. 50,000 இழப்பீடு - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்
மழை வெள்ள பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ. 50,000 இழப்பீடு - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் வடமேற்கு மற்றும் தென் மேற்கே சுமார் 29,000 ஏக்கர் விவசாய நிலங்களும் 21,000 விவசாயிகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த (2021) ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் பயிர் செய்த பயிர் நிலங்களில் மழைநீர் தேங்கி நஷ்டம் ஏற்பட்டதாக விவசாய குழுக்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து முறையிட்டனர்.

அப்போது மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த விவசாய நிலங்களின் ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை மாநில அரசால் வழங்கப்படும் என கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் கெஜ்ரிவால் உறுதி அளித்திருந்தார். அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் தொடர்பாக குழுக்கள் அமைத்து வருவாய்த் துறையினர் அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருந்தால் 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. அதற்கு பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து 2016 ஆம் ஆண்டு முதல் மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய விவசாய நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் முடிவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com