"வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" - தோனியின் பணி குறித்து கவாஸ்கர்!

"வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" - தோனியின் பணி குறித்து கவாஸ்கர்!
"வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" - தோனியின் பணி குறித்து கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது பணியின் தாக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 

“வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது அதிவிரைவாக நடைபெறும் ஆட்டம் என்பதால் தோனி, டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவலாம். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்படும் போது கள வியூகங்களையும் அவர் அமைத்துக் கொடுக்கலாம். 

டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். தோனியை இந்த பணிக்கு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. 

அதே போல நாக்-அவுட் நிலைகளில் சரியான ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டும். அதை செய்ய தவறினால் பாதகமாக அமையலாம். மேலும் முதலில் பேட் செய்ய வேண்டியதும் அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com