“நாக்-அவுட் சுற்றில் இந்தியாவை யார் வேண்டுமானாலும் அசைத்து பார்க்கலாம்” - நாசர் ஹுசைன்!

“நாக்-அவுட் சுற்றில் இந்தியாவை யார் வேண்டுமானாலும் அசைத்து பார்க்கலாம்” - நாசர் ஹுசைன்!
“நாக்-அவுட் சுற்றில் இந்தியாவை யார் வேண்டுமானாலும் அசைத்து பார்க்கலாம்” - நாசர் ஹுசைன்!

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணிகளை இந்தியா இந்த பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் நாக்-அவுட் சுற்றில் இந்தியாவை யார் வேண்டுமானாலும் அப்செட் செய்யலாம் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். 

“இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கலாம். ஆனால் டி20 பார்மெட் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் பேவரைட் அணி என என்னால் சொல்ல முடியாது. 

தனியொரு வீரரின் ஆட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அந்த வீரர் ஸ்கோர் செய்யும் 70 அல்லது 80 ரன்களோ. இல்லையெனில் அவர் வீசும் மூன்று பந்துகளோ ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடும். 

எனவே இந்தியாவை யார் வேண்டுமானாலும் நாக்-அவுட் சுற்றில் அப்செட் செய்யலாம். 

நாக்-அவுட் நிலைகளில் அவர்களிடம் ‘பிளான் B’ எனவொன்று இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியா, நியூசிலாந்து அணியிடம் கடந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வி கண்ட நாக்-அவுட் போட்டி அதற்கு ஒரு உதாரணம். 

இந்தியா கோப்பையை வெல்லும் என மக்கள் நினைப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் பேப்பரில் இடம் பெற்றுள்ள அந்த அணியின் லைன்-அப் தான்” என தெரிவித்துள்ளார் நாசர் ஹுசைன். 

இந்திய அணி வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com