வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு.... ட்ராக்டரை எரித்து இளைஞர்கள் போராட்டம்!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு.... ட்ராக்டரை எரித்து இளைஞர்கள் போராட்டம்!
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு.... ட்ராக்டரை எரித்து இளைஞர்கள் போராட்டம்!

டெல்லியில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளனர் டெல்லி போலீஸார்.

டெல்லி ராஜ்காட் முதல் ராஜ் நிவாஸ் வரை எதிர்ப்புப் பேரணி போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே அங்குவந்த போலீஸார் காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் தடுத்து காவலில் வைத்துள்ளதாகவும் கூட்டத்தின் தலைவர் அனில்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், லெப்டினன்ட் கவர்னரிடம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முறையான அறிக்கைத் தாக்கல் செய்யவிருந்ததாகவும், அதற்குள் போலீஸார் அவர்களைத் தடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்களை மோடி அரசு திரும்பப் பெறும்வரை, காங்கிரஸ் கட்சி ஓயாது எனக் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஹரிநகரில் வைத்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் பர்வேஸ் அலாம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புதுடெல்லி இந்தியா கேட் முன்பு பஞ்சாப் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 5 இளைஞர்கள் ட்ராக்டர் ஒன்றை இன்று காலை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 15-20 பேர் கொண்ட குழு, ட்ராக்டர் ஒன்றை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்ததாகவும், அதை இந்தியா கேட் முன்பு இறக்கி, தீக்கொளுத்தியதுடன், விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் இந்த மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கூச்சலிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள் தீயை அணைத்ததாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்ஜோத் சிங்(36). ரமன்தீப் சிங் சிந்து(28), ராகுல்(23), சாகிப்(28), சுமித்(28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களையும் தனியாக காவலில் வைத்துள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com