டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சார்பில் தனியாக நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், தனியாக நாடாளுமன்ற அமர்வுகளை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடத்தவுள்ளதாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைட் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “ நாடாளுமன்றத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் “விவசாயிகள் நாடாளுமன்றத்தை” நடத்தவுள்ளோம்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவடையும் நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் நடவடிக்கைகளையும் விவசாயிகள் கண்காணிப்பார்கள்” என்று கூறினார். விவசாயிகள் ஜந்தர் மந்தரில் கடந்த வியாழக்கிழமையன்று தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர்.