வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்?- ஸ்டாலின் கேள்வி

வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்?- ஸ்டாலின் கேள்வி
வேளாண் மண்டலங்களில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டது ஏன்?- ஸ்டாலின் கேள்வி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். காவிரி வேளாண் மண்டல சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் என குழுவில் 30பேர் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவு மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஸ்டாலின் பேசுகையில், “வேளாண் நிலங்கள் ரியல் எஸ்டேட் போடப்படுவது ஏன் தடுக்கவில்லை. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பாதிக்கப்படாது என்று சட்டத்தில் உள்ளது. நடைமுறையிலுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சட்டமுன்வடிவை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். இச்சட்டம் என்பது விவசாயத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும் சட்டமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com