
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அறவழியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை - அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர்கள் இரண்டு பேர் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையில் கருப்பு கொடியுடன் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் களத்தில் இருந்து அப்புறப்படுத்தியதோடு, கைது செய்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.