“ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துமா?” - இந்திய பிரபலங்களுக்கு நடிகை டாப்ஸி கேள்வி

“ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துமா?” - இந்திய பிரபலங்களுக்கு நடிகை டாப்ஸி கேள்வி
“ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துமா?” - இந்திய பிரபலங்களுக்கு நடிகை டாப்ஸி கேள்வி

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை டாப்ஸி ட்வீட் செய்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், பாடகி ரிஹானா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ”ஒரு நாடாக நமக்கு இன்றைக்கு தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. நாளையும் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கும்; அதற்கு நாம் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறோம் அல்லது வெளிப்புற சக்திகளால் குழப்பமடைகிறோம் என்று அர்த்தமாகாது; எல்லாவற்றையும் இணக்கமான மற்றும் பாரபட்சமற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத்  ரிஹான்னாவிற்கு பதில் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில், “ஒருவரும் அதுகுறித்து பேசாததற்கு காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிரிக்க திட்டமிடும் தீவிரவாதிகள். எனவே அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும். அமைதியாக இரு முட்டாளே! உங்களைப்போல நாட்டை விற்பவர்கள் நாங்கள் அல்ல’’ என்று சாடியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். நம் நாட்டின் கட்டமைப்பே விவசாயிகள் தான். அமைதியைக் கொண்டுவருவதற்கும் முன்னேறுவதற்கும் அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு இணக்கமான தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் என்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்கும் என்றால், உங்கள் மதிப்பை வலுப்படுத்த நீங்கள் உழைக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு வெறும் பிரசாரங்களை முன்வைப்பவர்களாக மட்டுமே இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com