டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செலுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும் :முத்தரசன்

டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செலுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும் :முத்தரசன்
டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செலுத்தும் தேதியை  நீட்டிக்க வேண்டும் :முத்தரசன்

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தாவது “ நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் சென்னை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது  சரியான முறையில் தமிழக அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது, வடிகால்களை தூர்வாராதது போன்றவையே இதற்கு காரணம். மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தில்  தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வர்த்தக நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர்.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலின் போதும் கடந்த ஆண்டும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் மகசூல் கணக்கீட்டில் குளறுபடி செய்து வேளாண்மைத் துறையும் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதன் விளைவாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பெற முடியாமல் விவசாயிகள் சங்கங்கள் ,அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித பலனும் இல்லை.

 நிகழாண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் பெற மறுத்து வரும் நிலையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் இணையதள சேவை மையங்களில் அனைத்து விவசாயிகளும் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த முடியாமல் காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர். நவம்பர் 24 உடன் பயிர் காப்பீடு பிரீமியம் பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது.

எனவே நிபந்தனை இன்றி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் இணையதள சேவை மையங்கள் மூலமாக டிசம்பர் 15 வரை காப்பீடு தொகையை பெற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com