விவசாயம்
தொடர் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கிய நாற்றுநடும் பணிகள்
தொடர் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கிய நாற்றுநடும் பணிகள்
தருமபுரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் நெல் நாற்று நடும் பணிகள் தொடங்கியுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதனால் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்று நடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாய பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ.300 முதல் 500 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.