ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 247 கோடி நிவாரணத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மொத்தமுள்ள 16,628 வருவாய் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 1,564 கிராமங்களில் அதிகபட்சமாக 87 சதவிகிதம் வரை வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 29 லட்சம் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 46 லட்சம் ஏக்கருக்கு 2 ஆயிரத்து 49 கோடி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ரூ.3,000, நீண்டகாலப் பயிருக்கு ரூ.7,287 வழங்கப்படும். மேலும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3.ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும், இந்த அறிவிப்பால் பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 லட்சம் விவசாயிகள் ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீடு பெறலாம். இவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com