\
மழை: சின்ன வெங்காயம் விலை உயர்வு

மழை: சின்ன வெங்காயம் விலை உயர்வு

மழை: சின்ன வெங்காயம் விலை உயர்வு
Published on

சேலத்தில் அறுவடை காலத்தில் மழை பெய்ததால் சின்ன வெங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் அறுவடை காலத்தில் மழை பெய்தது. இதனால் பயரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் வயலிலே அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓமலூர் வெங்காய சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து, விலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெங்காயத்தின் விற்பனை குறைந்து விவசாயிகள் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெளி மாநிலங்களின் சின்ன வெங்காயம் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே இதன் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிறிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாவதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் வெங்காயத்தின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com