விவசாயம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தர்ணா
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தர்ணா
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
காந்தி சிலை முன்பாக நடந்த தர்ணாவில் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மணீஸ் திவாரி, கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர், ஜோதிமணி, சசிதரூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது விவசாயத்தை காப்போம், தேசத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.