நீரின்றி தவிக்கும் புதுச்சேரியின் நெற்களஞ்சியம்; முடங்கிய விவசாயம்.. வேதனையில் விவசாயிகள்!

ஏரிகள் சரிவர தூர்வாரப்படாததால் கடலில் வீணாக கலக்கும் நீர். டெல்டா மாவட்ட ஆறுகளில் இருந்து வரும் நீரை சேமித்து வைக்க 6 ஏரிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டன.

காவிரி கடைமடைப் பகுதியான புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முறையாக தூர்வாரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காரைக்கால் மாவட்டம், காவிரி கடைமடைப்பகுதி என்பதால் காவிரி நீர் கானல் நீராகவே உள்ளது. இதற்கு முன் 50000 ஹெட்டேரில் விவசாயம் நடைப்பெற்று வந்த நிலையில் தற்பொழுது 12000 ஹெட்டேராக குறைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com