\
வேளாண்குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்லமுடியாது - ப. சிதம்பரம் ட்வீட்

வேளாண்குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்லமுடியாது - ப. சிதம்பரம் ட்வீட்

வேளாண்குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்லமுடியாது - ப. சிதம்பரம் ட்வீட்
Published on: 

உழவினார் கைம்மடங்கின் இல்லை வாவ்வதூஉம் விட்டேம் என் பார்க்கும்நிலை என்பதை விரைவில் அரசு உணரும் என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

விவசாயிகளுடன் நடைபெற்ற 7வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்விக்கு யார் காரணம், என்ன காரணம்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக்கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள் என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும்,

''உழவினார் கைம்மடங்கின் இல்லை வாவ்வதூஉம்

  விட்டேம் என் பார்க்கும்நிலை’’

என்பதை விரைவில் அரசு உணரும். வேளாண்குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்லமுடியாது, வேளாண்குடி மக்களே வெற்றி பெறுவார்கள் என்றும் அந்த ட்வீட்டில் அவர் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com