விளைச்சல் இருந்தும் விலையில்லை: ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டப்படும் வெண்டைக்காய்

விளைச்சல் இருந்தும் விலையில்லை: ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டப்படும் வெண்டைக்காய்
விளைச்சல் இருந்தும் விலையில்லை: ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டப்படும்  வெண்டைக்காய்

அதிகப்படியான விளைச்சல் மற்றும், விற்பனைக்கு வாய்ப்பு இல்லாததால் வெண்டைக்காய் விற்பனை அடியோடு முடங்கியது. இதனால் வெண்டைக்காய் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மானாவரி சாகுபடியாகவும், கிணற்றுநீர் பாசன முறையிலும் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேனி, பின்னத்தேவன்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூர், பூதிப்புரம் என மாவட்டம் முழுவதும் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 


குறுகிய கால பயிரான வெண்டைக்காயின் விலை எப்போதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சராசரியாக இருந்ததால் விவசாயிகள் அதிக ஆர்வமுடன் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டு கேரளாவில் ஒணம் பண்டிகை சமயத்தில் அதிகபட்சமாக 1 கிலோ வெண்டைக்காய் ரூ.120 வரை விற்பனையானது. இதேபோல தொடர்ந்து விலை உயர்வு இருக்கும் என எண்ணி விவசாயிகள் ஆர்வமுடன் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிக அளவில் இருக்கிறது. ஆனால் வெளி மாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் வெண்டைக்காய் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தேனியில் உள்ள காய்கறி ஏல மார்க்கெட்டில் வெண்டைக்காயை குவித்து வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு வெண்டைக்காய் அதிக அளவில் விளைந்துள்ளதாலும், வாங்குவதற்கு வியாபாரிகள் வராததாலும் விளைந்துள்ள வெண்டைக்காயை வேறு வழியின்றி அருகில் உள்ள வீரபாண்டி ஆற்றில் கொட்டி வருகின்றனர்.ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், தற்போது வெண்டைக்காய் விலை 1ரூபாய்க்கு கீழே சென்றுவிட்டதால் பல விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட வெண்டைக்காயை பறிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com