”இயற்கைதான் எங்களுக்கு முதல் கடவுள்” - இயற்கை வாழ்வியல் முறையில் நிம்மதி அடையும் தம்பதி

”இயற்கைதான் எங்களுக்கு முதல் கடவுள்” - இயற்கை வாழ்வியல் முறையில் நிம்மதி அடையும் தம்பதி
”இயற்கைதான் எங்களுக்கு முதல் கடவுள்” - இயற்கை வாழ்வியல் முறையில் நிம்மதி அடையும் தம்பதி

கொரோனாத் தொற்று நெருக்கடியைக் கொடுத்தாலும் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்கை முறையைப் பின்பற்றும் மீரா- சாய் முரளி தம்பதியினரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள போலுவப்பட்டியில், வீட்டைச் சுற்றி சுமார் ஒரு ஏக்கரில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார்கள் மீரா- சாய்முரளி தம்பதியினர். தற்சார்பு வாழ்கை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர்கள், மின்சாரத் தேவைக்கு சோலார், குடிநீருக்கு மழைநீர் சேமிப்பு, உணவுக்குத் தோட்டத்தில் விளையும் காய்கறி மற்றும் பழங்கள் என 95 சதவிகிதம் இயற்கைச் சார்ந்த வாழ்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.

கொரோனாத் தொற்று ஒரு பக்கம் நெருக்கடியை கொடுத்தாலும், இயற்கையே முதல் கடவுள் எனக் கூறி இன்றளவும் இயற்கைச் சார்ந்த தற்சார்பு வாழ்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.

கோவை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் சாய்முரளி. இவரது மனைவி மீரா. இவர் தனியார் வங்கிகளில் பணியாற்றி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்குமே இயற்கை வாழ்வியல் மீது தீரா காதல். இதன் விளைவு தங்களுக்குச் சொந்தமான ஒரு இடத்தில், சோதனை முறையில் பல மரங்களை நட்டு, அதற்கு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் அதற்கு கோமியத்தை பயன்படுத்தியுள்ளனர். சோதனை முறையில் செய்த இந்த சிறு முயற்சி வெற்றியடைய, இன்று அங்கு ஏராளமான மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இது குறித்து அவர்களிடம் கேட்ட போது “ இயற்கையே எங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தருகிறது. எங்களது தோட்டத்தில் ஆப்பிள், பிரெட் ஃப்ரூட், செர்ரி, கொய்யா, மாம்பழம், நாவல் பழம், மலைநெல்லி, பப்பாளி, பலா, முந்திரி பழம் எனப் பலவகைப் பழ மரங்களும் உள்ளன. இது மட்டுமன்றி தென்னை, தேக்கு, குமிழ், சவுக்கு என நூற்றுக்கணக்கான மரங்களும், 100 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன.

எங்களுக்கு இயற்கைதான் முதல் கடவுள். எங்களது காலை உணவு தேங்காய்ப்பால், கறிவேப்பிலைச் சாறு, வாழைப்பழச் சாறு முதலியவை. மதியம் அந்தந்தப் பருவங்களில் தோட்டத்தில் விளையும் பழங்கள், மாலை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை ஓபோஸ் (One Pot One Shot) முறையில் சமைத்து சாப்பிடுகிறோம். காலையும் மாலையும் மூலிகை தேநீர் என கடந்த 10 வருடங்களாக இயற்கைச் சார்ந்து வாழந்து வருகிறோம்.” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com