தேசிய விவசாயிகள் தினம்: கூலித் தொழிலாளிகளுக்கு லாபத்தை போனஸாக கொடுக்கும் விவசாயி

தேசிய விவசாயிகள் தினம்: கூலித் தொழிலாளிகளுக்கு லாபத்தை போனஸாக கொடுக்கும் விவசாயி

தேசிய விவசாயிகள் தினம்: கூலித் தொழிலாளிகளுக்கு லாபத்தை போனஸாக கொடுக்கும் விவசாயி
Published on

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னிடம் பணிபுரியும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தனது லாப தொகையை பிரித்துக் கொடுத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சுக்காம்பாறை பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி மரிய ஜோசப் (46) விவசாயத்தை அதிகம் நேசிக்கும் இவர், கஷ்டபட்டு விவசாய கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய கூலி கிடைக்காத நிலையை கண்டு பல நாட்கள் வருத்தபட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது தந்தையின் விவசாய நிலத்தை சீர்படுத்தி இயற்கை விவசாய முறையில் பாகற்காய் மற்றும் பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகளை பந்தல் விவசாய முறையில் பயிரிட்டுள்ளார். அதன் மூலம் விளையும் காய்களை கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார்.

இவரது தோட்டத்தில் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கும் 50 பெண் தொழிலாளர்களுக்கு தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பணிபுரிந்த நாட்களின் அடிப்படையில் தனக்கு கிடைக்கும் லாப தொகையில் இருந்து தலா ரூ.7000 முதல் ரூ.9000 வரை போனஸாக வழங்கி வருகிறார். மேலும் அதிக நாட்கள் வேலைக்கு வரும் பெண் கூலித் தொழிலாளர்களுக்கு பரிசு தொகையுடன் பரிசுப் பொருட்களையும் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

விவசாயத்தையும் விவசாய கூலித் தொழிலாளர்களையும் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற செயலில் ஈடுபட முடியும் என்பதற்கு மரிய ஜோசப் சிறந்த எடுத்துக்காட்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com