மக்காச்சோளம், நெல் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு அறிமுகம்

மக்காச்சோளம், நெல் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு அறிமுகம்
மக்காச்சோளம், நெல் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு அறிமுகம்

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இஃப்கோ நானோ திரவ யூரியாவை ட்ரோன் மூலம் மக்காச்சோளம், நெல் வயல்களில் தெளிக்கும் அறிமுக விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்தியாவில் முதன்மை உர நிறுவனமான இஃப்கோ, தற்போது நானோ திரவ யூரிவை தயாரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம் பவானிசாகரில் திரவ நானோ யூரியாவை ட்ரோன் மூலம் மக்களாச்சோளப் பயிரில் தெளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் முன்னிலையில் நெல் மற்றும் மக்காச்சோளத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்க நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நானோ திரவ யூரியா பயன்பாட்டில் கிடைக்கும் பயன்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.

தற்போது விவசாயத்தில் சாதராண யூரியாவை அடிஉரமாக இடும்போது தழைச்சத்து 35 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. தழைசத்து உபயோகிக்கும் திறனை அதிகரிக்கவும் ஆள் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாக உள்ளதால் திரவ நானோ யூரியா 70 சதவீதம் தழைச்சத்தை பயிர்களுக்கு கொண்டு செல்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திரவம் நானோ யூரியா 500 மில்லி லிட்டரை 125 லிட்டரில் கரைத்து ட்ரோன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 5 நிமிடங்களில் இரு முறை தெளித்தால் போதும். உடனடியாக பயிர்களுக்கு தழைச் சத்து கிடைக்கும்.

இதே அளவு யூரியாவை சாதாரணமாக விசைத்தெளிப்பான் மூலம் 40 நாட்கள் தெளிக்க வேண்டும். ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நானோ யூரியாவை நெல் மற்றும் மக்காச்சோளத்தில் ட்ரோன் மூலம் தெளிக்கும்போது இலை வழியாக தழைச்சத்து நேரடியாக செல்வதால் மகசூல் அதிகரிக்கும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com