கலப்படத்தால் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் தவிக்கும் விவசாயிகள்..!

கலப்படத்தால் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் தவிக்கும் விவசாயிகள்..!
கலப்படத்தால் விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் தவிக்கும் விவசாயிகள்..!

விளைச்சல் இருந்தும் விலையில்லாமல் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், குறைந்த மழையளவு கொண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடிய ஒரு பணப்பயிர் மரவள்ளி கிழங்கு. 12 மாத பயிரான மரவள்ளியை நடவு செய்த பிறகு இருமுறை களை எடுத்து உரம் வைப்பதோடு, வறட்சியான காலத்தில் நீர் பாய்ச்சினால் போதுமானது. அதிகம் செலவு பிடிக்காத இப்பயிரினை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் பெய்த மழையின் காரணமாக மரவள்ளிக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால், நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னர்வரை மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விலை போன நிலையில் தற்போது விலை மிக குறைந்து 6,000 ரூபாய்க்கு மட்டுமே விலைபோகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மரவள்ளி கிழங்கின் மாவில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கொள்ளை லாபம் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து தயாரிப்பதால் மரவள்ளி கிழங்கை மிக குறைந்த விலைக்கு வாங்கி தங்களை வஞ்சிப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே இந்த கலப்படத்தை தடுத்து நியாயமான விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com