'விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

'விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

'விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Published on

'டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்கப்படும்' என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களும், முன்சம்பா சாகுபடி பயிர்களும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் பத்தாயிரம் ஏக்கர் அளவுக்கான பயிர்கள் நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நிலையில், சுமார் 10,000 ஏக்கர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நிலையில், சுமார் 10,000 ஏக்கர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் ஏக்கர் அளவுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஐந்தாயிரம் ஏக்கர் அளவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் கணக்கெடுத்தபிறகே மொத்த பாதிப்பு விவரங்கள் முழுமையாக தெரியவரும்

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com