ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு: நீர்வழித்தடங்கள் விரைந்து தூர்வாரப்படுமா?

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு: நீர்வழித்தடங்கள் விரைந்து தூர்வாரப்படுமா?
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு: நீர்வழித்தடங்கள் விரைந்து தூர்வாரப்படுமா?

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இம்மாத இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக - கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து சுமார் ஆயிரம் கனஅடி நீர் திறப்பு ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், கேரளா கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இம்மாத இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதியிலேயே டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்வழித்தடங்களை தூர்வாருமாறு விவசாயிகள் கோரிக்கை:

இதனிடையே, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நீர்வழித்தடங்களை விரைந்து தூர்வாருமாறு திருத்துறைப்பூண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து வழக்கம்போல ஜூன் 12 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்படுமென்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக உழவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கடைமடைப் பகுதியான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேருவதில் சிரமம் நீடிக்கிறது. முள்ளியாறு, முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்கள் இதுவரை தூர்வாரப்படாமல் உள்ளன. எனவே தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி நீர்வழித்தடங்களை தூர்வாருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com