கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கிளை வாய்க்கால்களை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை
Published on

மயிலாடுதுறை மாவட்டம் சீழ்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடற்கரையையொட்டிய வடகால், ஆமைபள்ளம், கடவசால் உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் அணையின் நீரை நம்பியே சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தற்போது சாகுபடி செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com