\
“எங்கள் பிரச்னையையும் கவனியுங்கள்”- சுஷாந்தின் படத்தோடு போராடிய மத்திய பிரதேச விவசாயிகள்

“எங்கள் பிரச்னையையும் கவனியுங்கள்”- சுஷாந்தின் படத்தோடு போராடிய மத்திய பிரதேச விவசாயிகள்

“எங்கள் பிரச்னையையும் கவனியுங்கள்”- சுஷாந்தின் படத்தோடு போராடிய மத்திய பிரதேச விவசாயிகள்
Published on: 

மத்தியப் பிரதேச விதிஷா மாவட்டத்தில் ஜாபர்கேதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அண்மையில் பெய்த மழையினால் தங்களது நிலத்தில் விளைவித்த பயிர்கள் முழுவதும் சேதமானதால் நஷ்ட ஈடு கேட்டு போராடினர்.

நேற்று அவர்கள் தங்களது நிலத்தில், தற்கொலை செய்து கொண்டு இறந்த பாலிவுட் சினிமாவின் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் படத்துடன் போராடினர். 

‘நடிகர் சுஷாந்தின் தற்கொலையில் உள்ள மர்மத்தை களைய தேசமே குரல் கொடுப்பதுபோல எங்களது இழப்புக்கும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். பல ஏக்கர் நிலங்களில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக மழையில் மூழ்கி அழுகிவிட்டன’ என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

முறையான ஆய்வுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com