எலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை

எலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை
எலுமிச்சை விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை விளைச்சலுக்கு பெயர் பெற்ற கடையம் ஊராட்சி, தற்போது போதிய நீரின்றி விளைச்சல் பாதித்ததால் ஏற்றுமதியும் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அழகிய கிராமமான கடையம், எலுமிச்சை விவசாயத்திற்கு பெயர் பெற்றது. கடையம் ஊராட்சியில 23 பஞ்சாயத்தும், 84 குக்கிராமங்களும் இருக்கிறது. இந்த குக்கிராமங்கள் அனைத்திலும் எலுமிச்சை விளைவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக‌ மழை பெய்யாத நிலையில் குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மரங்கள் கருகி நின்று விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளன.

ஐந்தில் ஒருபங்கே விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், கடையம் மொத்த கமிஷன் கடைக்கு நாளொன்றுக்கு 500 மூடைகள் வந்த இடத்தில் தற்போது 100 மூடைகள் மட்டுமே வருவதாக கூறுகிறார்கள் விவசாயிகள். தேவை அதிகம் உள்ள கோடைக்காலத்தில் எலுமிச்சை விளைச்சல் சரிந்தது விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னடைய வைத்துள்ளது. குளங்கள் மற்றும் நீர் வரத்து பாதைகளை தூர் வாரி பிரசித்திபெற்ற கடையம் எலுமிச்சை விவசாயம் அழியாமல் காக்க வேண்டும் என்றும். கருகிய மரங்களுக்கு மாற்றாக புதிதாக அரசே எலுமிச்சை கன்றுகளை மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com