விவசாயம்
கொடைக்கானல், தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்... பூண்டு விதையிடும் பணிகள் தீவிரம்
கொடைக்கானல், தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்... பூண்டு விதையிடும் பணிகள் தீவிரம்
கொடைக்கானல், தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்... பூண்டு விதையிடும் பணிகள் தீவிரம்.
கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வறண்டு கிடந்த நீர் ஆதாரங்கள் நிரம்பிவருகிறது.
தொடர் மழையால் மண்வளம் இளகி, ஆடி பட்ட விதைப்பிற்கு ஏற்ற காலசூழல் உருவாகியுள்ளது. இதனால் மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட மேல்மலை கிராமங்களில் மலைப்பூண்டு விதையிடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்தமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளதால் விதையிடும் பூண்டு பயிர்களுக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்