"கார்பரேட்களால் மருத்துவ தன்மைமிக்க இயற்கை தேன் அழியும் அபாயம்" - விவசாயிகள் குற்றச்சாட்டு

"கார்பரேட்களால் மருத்துவ தன்மைமிக்க இயற்கை தேன் அழியும் அபாயம்" - விவசாயிகள் குற்றச்சாட்டு
"கார்பரேட்களால் மருத்துவ தன்மைமிக்க இயற்கை தேன் அழியும் அபாயம்" - விவசாயிகள் குற்றச்சாட்டு

கார்பரேட்களுக்கு செயற்கை தேன் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதியளிப்பதால் மருத்துவ தன்மைமிக்க இயற்கை தேன் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தேன் விவசாயிகள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. உணவாக மட்டுமல்லாது மருத்துவ பயன் அதிகம் வாய்ந்ததாகவும் கருதப்படும் இந்த தேன் உற்பத்தியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேனை மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் மூலம் தரம் பிரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தேன் உற்பத்தியில் கார்பரேட் நிறுவனங்களுக்கு செயற்கை தேன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, தேன் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கக்கூட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்தியில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கார்பரேட்களுக்கு செயற்கை தேன் உருவாக்கும் அனுமதியை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த முடிவே கைவிடவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com