கள்ளக்குறிச்சி: மழையில் நனைந்து 2000 நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி: மழையில் நனைந்து 2000 நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை
கள்ளக்குறிச்சி: மழையில் நனைந்து 2000 நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

நேற்று பெய்த மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

தமிழக அரசு விவசாயிகளை அலைக்கழிக்க விடாமல் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொண்டு வந்து நெல்லை விற்பனை செய்வதை தவிர்க்கும் விதமாக விவசாயிகள் உள்ள பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 10 நாட்களுக்கும் மேலாக காத்திருக்க செய்து பின்னர் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி காத்திருக்கும் வேளைகளில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது.

அந்த வகையில் நேற்று பெய்த மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. இதில் ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகள் கொண்டுவந்தது. மேலும் ஆயிரம் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள். இதனால் ஆயிரம் மூட்டைகள் விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், ஆயிரம் மூட்டைகள் அரசாங்கத்திற்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரசு உடனடியாக  குடோனுக்கு எடுத்து செல்லாததே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக்கூறும் விவசாயிகள்,கொண்டு வரும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com