100% பார்வையாளர்களுடன் கொல்கத்தா, அகமதாபாத்தில் 'ஐபிஎல் பிளே- ஆஃப் 'போட்டிகள்!

100% பார்வையாளர்களுடன் கொல்கத்தா, அகமதாபாத்தில் 'ஐபிஎல் பிளே- ஆஃப் 'போட்டிகள்!
100% பார்வையாளர்களுடன் கொல்கத்தா, அகமதாபாத்தில் 'ஐபிஎல் பிளே- ஆஃப் 'போட்டிகள்!

ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரு ஐபிஎல் சீசன்கள் மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி அல்லது குறைவான பார்வையாளர்களுடனே விளையாடப்பட்டது. ஆனால் இந்த ஐபிஎல் சீசனின் துவக்க ஆட்டங்கள் 25% பார்வையாளர்களுடன் நடைபெற்றது. கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து 50% பார்வையாளர்களுக்கு மைதானங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லீக் போட்டிகளுக்காக இதுவரை பயன்படுத்தப்பட்ட நான்கு மைதானங்கள் மகாராஷ்டிராவிலேயே உள்ளன, மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் புனேவில் உள்ள MCA ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் விளையாடப்பட உள்ளது. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. “ஐபிஎல் நாக் அவுட் நிலை ஆட்டங்களைப் பொறுத்தவரை, 100 சதவீத பார்வையாளர்களுடன் கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும்” என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com