மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 491 கன அடியில் இருந்து 11 ஆயிரத்து 392 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று முன் தினம் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணைகளில் இருந்து காவிரியாற்றில் விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட கூடுதல் நீர் வந்ததால் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 392 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 73.97 அடியாக உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி நீரும், வெளியேற்றப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com