“விவசாயிகளின் தலையை உடைக்க” என்றுசொன்ன அதிகாரியை பாதுகாக்கிறாரா ஹரியானா முதல்வர் கட்டார்?

“விவசாயிகளின் தலையை உடைக்க” என்றுசொன்ன அதிகாரியை பாதுகாக்கிறாரா ஹரியானா முதல்வர் கட்டார்?
“விவசாயிகளின் தலையை உடைக்க” என்றுசொன்ன அதிகாரியை பாதுகாக்கிறாரா  ஹரியானா முதல்வர் கட்டார்?

ஹரியானா மாநிலம் கர்னலில் போராடிய விவசாயிகளுக்கு எதிராக "தலையை பிளக்க வேண்டும்" என போலீஸாருக்கு உத்தரவிட்ட  ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹா "மோசமான வார்த்தைகளைத் பயன்படுத்தினார் என்றாலும் கண்டிப்பு முக்கியம்” என மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிகாரியின் வார்த்தைகள் தேர்வு சரியாக இல்லை என்றாலும், அங்கு சட்டம் ஒழுங்கு நிலை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய கண்டிப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதிகாரிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், அது முதலில் மாவட்ட நிர்வாகத்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். டிஜிபியும் அதை கவனித்து வருகிறார் "என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் பொறுப்பு என்று கூறினார்.

ஆனால் நேற்று, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, ஐஏஎஸ் அதிகாரியின் விமர்சனத்திற்குரிய கருத்தை ஏற்கவில்லை, கர்னலில் போராடும் விவசாயிகளின் தலையை உடைக்குமாறு போலீசாரிடம் கூறிய ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரி இதுபோன்ற மொழியைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவர்களின் பயிற்சியின் போது, இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது மற்றும் அவர்களின் செயல்களில் சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்று அதிகாரிகளுக்கு கற்பிக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் பேசியது அத்தகைய அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நெறிமுறை இல்லை என்று சவுதாலா தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com