புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி.வேலுமணி

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி.வேலுமணி
புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி.வேலுமணி

புதிய வேளாண் திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு உள்ளது என்று சொல்ல முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை மாவட்டம் நம்பியார் நகரில் 34 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் தன்னிறைவு திட்டத்தின் கீழ், சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் மீனவ கிராம மக்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்துகொண்டு துறைமுக நிர்மான பணிகள் தொடங்குவது குறித்து மீனவர்களிடம் எடுத்துக் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு இடையூறாக இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.


எனவே தமிழக விவசாயிகளுக்கு இந்த சட்டத்தால், பாதிப்பு இல்லை என்பதால் தற்போது நடைபெறும் கடையடைப்பு வேலை நிறுத்தம் தேவையற்றது என்றார். தொடர்ந்து, பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் திமுக புதிய வேளாண் திருத்த சட்டத்தால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு உள்ளது என சொல்ல முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com