தடையின்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

தடையின்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
தடையின்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு முறை வெப்சைட் விரைவாக சரியான முறையில் இயங்குவதால் விவசாயிகள் எளிதாக பதிவு செய்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டது. தற்போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிந்து மீதமுள்ள பரப்பு அறுவடை நடந்து வருகிறது அடுத்த மாதம் இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக அறுவடை முடிந்துவிடும்.

இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய ஆன்லைன் முறையில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு விவசாயிகளை அறிவுறுத்தியது.

ஆனால், ஆரம்ப சில வாரங்களுக்கு முன்ப விவசாயிகள் பதிவு செய்யும் வெப்சைட் சரிவர இயங்காமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது அதன்பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களின் தீவிர முயற்சியால் விவசாயிகள் பதிவு செய்யும் வெப்சைட் சர்வர் சீர்செய்யப்பட்டது.

மேலும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளரிடம் நேரடியாகவே சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து அங்கேயே பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்ய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது

இதனால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையில் பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்கள் மேலும் தனியார் இ சேவை மையங்களிலும் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com