டெல்லி போராட்டக் களம்: கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசி, ஃபிரிட்ஜ் பயன்படுத்தும் விவசாயிகள்

டெல்லி போராட்டக் களம்: கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசி, ஃபிரிட்ஜ் பயன்படுத்தும் விவசாயிகள்

டெல்லி போராட்டக் களம்: கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசி, ஃபிரிட்ஜ் பயன்படுத்தும் விவசாயிகள்
Published on

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலைநகர் டெலலயின் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். இருப்பினும் விவசயிகளின் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாட்டி வதைக்கும் கோடையை சமாளிக்க போராட்டக் களத்தில் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ்களை பயன்படுத்தி வருகின்றனர் விவசாயிகள். மழையும், குளிரையும் சமாளித்த விவசாயிகள் இப்போது கோடையை சமாளிக்கவும் தயாராகி உள்ளனர். இதன் மூலம் இப்போதைக்கு தாங்கள் போராட்டக் களத்தை காலி செய்வதாக இல்லை என்பதை திட்டவட்டமாக சொல்லி உள்ளனர் விவசாயிகள். 

சிங்கு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிலக குடியுறுப்புகளில் விவசாயிகள் ஏசி மற்றும் ஃபிரிட்ஜை பொருத்தி பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாதனங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை அருகாமையில் உள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு என அனைத்தும் சிறப்பாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள். 

இதற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை தங்களது சொந்த செலவிலும், சில நல் உள்ளம் படைத்த மனிதர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகள் அளித்த உதவியும் கொண்டு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com