”ஓடு பெரிசு.. ஆனா, உள்ளே பருப்பு கருப்பா இருக்கு” - விருத்தாசலம் மணிலா விவசாயிகள் வேதனை!

”ஓடு பெரிசு.. ஆனா, உள்ளே பருப்பு கருப்பா இருக்கு” - விருத்தாசலம் மணிலா விவசாயிகள் வேதனை!
”ஓடு பெரிசு.. ஆனா, உள்ளே பருப்பு கருப்பா இருக்கு” - விருத்தாசலம் மணிலா விவசாயிகள் வேதனை!

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மணிலாவில் காய் பிடிப்பு திறன் இல்லாததால் மணிலா (வேர்க்கடலை) விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சின்னவடவாடி, பெரிய வடவாடி, மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வேர்கடலையை மானாவாரி பயிராக சாகுபடி செய்து உள்ளனர் அப்பகுதி விவசாயிகள். நிலக்கடலை, வேர்க்கடலை, மணிலா, கடலைக்காய், மல்லா டை என வட்டார மொழியில் பல பெயர் இதற்கு உண்டு.  இந்த நிலையில், மணிலா செடி நன்கு செழித்து வளர்ந்து காணப்பட்ட நிலையில் வேர் பகுதியில் கருப்பு நிறத்தில் மணிலா நிறம் மாறி காணப்படுகிறது. மேலும் மணிலாவின் ஓடு பெரிதாக இருந்த போதிலும் காய் பிடிப்புக்கு இல்லாமல் காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்பொழுது, “மணிலா செடியை பிடுங்கி பார்க்கும் போது ஓடு மட்டுமே உள்ளது. உரித்து பார்த்தால் மணிலா பயிறு பெருக்காமலும் கருப்பாகவும் காணப்படுகிறது” என  வேதனை தெரிவிக்கின்றனர்..  இதனால் மணிலா விவசாயிகள் அறுவடையில் போதிய மகசூல் இன்றி மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க உள்ள்தாக என வேதனை தெரிவிக்கின்றனர்...

ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்த அறுவடை செய்தால் ஏமாற்றமே மிஞ்சும் என வேதனை தெரிவிக்கின்றனர். வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கிய விதை மணிலாவில் பிரச்சனையா ? நோய் தாக்கமா ?, பருவநிலை மாற்றமா? என எந்த காரணமும் தெரியாமல் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து விருத்தாசலம் வேளாண் துறை உதவி இயக்குனரிடம் கருத்து கேட்டதற்கு ”இதற்கான தகுந்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ”என தெரிவித்தார்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com