தஞ்சையில் முழுவீச்சில் நேரடி நெல் கொள்முதல் பணி: கூடுதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

தஞ்சையில் முழுவீச்சில் நேரடி நெல் கொள்முதல் பணி: கூடுதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

தஞ்சையில் முழுவீச்சில் நேரடி நெல் கொள்முதல் பணி: கூடுதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
Published on

ஞாயிற்றுக்கிழமையான இன்று தஞ்சை மாவட்டத்தில் 214 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அமோகமாக நடைபெற்றது. அதன் அறுவடை பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் சாலை ஓரங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பல லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியது.

இது குறித்த செய்தி வெளியான நிலையில் காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிற்றுக் கிழமையான விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒரத்தநாடு, கக்கரை, கோவிலூர், மாரியம்மன் கோவில் உள்பட 214 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் பணிகள் ஞாயிற்றுக் கிழமையிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதேநேரம் லட்ச கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், “எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. விரைந்து கொள்முதல் செய்ய கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com