வெண்‌டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வெண்‌டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வெண்‌டைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

வெண்டைக்காய் விலை அதிகரித்துள்ளதால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி‌ சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில், ‌அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டதால் விலை கிலோவிற்கு 20 ரூபாய் வரையே விற்றது. இந்நிலையில் தற்போது விளைச்சல் குறைந்தாலும் விலை ஒரு கிலோ 60 ரூபாய் வரை விற்பதால் போதிய லாபம் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com